Skip to content

கரூரில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி.. பொதுமக்கள் ஆர்வம்

  • by Authour

கரூரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி – 30% தள்ளுபடி விலை: பொதுமக்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டு வாங்கி செல்கின்றனர்.

கரூர், தாந்தோணிமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு கைத்தறி துறை மற்றும் மத்திய அரசு ஜவுளித்துறை, கைத்தறி வளர்ச்சி ஆணையம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் 60 அரங்குகள் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு

சங்கங்கள் பங்கு பெற்று, கைத்தறி துணிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கண்காட்சியின் மூலம் 3 கோடி அளவிற்கு விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வடிவமைப்புகளில் காஞ்சிபுரம் பட்டு சேலைகள், திருபுவனம் பட்டு சேலைகள், ஆரணி பட்டு சேலைகள், சிறுமுகை மென் பட்டு சேலைகள், நெகமம் காட்டன் சேலைகள், மதுரை சுங்கடி காட்டன், சேலம் வெண்பட்டு வேஷ்டிகள், நீலகிரி தோடர் எம்பிராய்டரி சால்வைகள் மற்றும் கரூர் தயாரிப்புகள் உட்பட தமிழகத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட

பிரபலமான கைத்தறி ஜவுளிகள் ஒரே இடத்தில் 30 சதவீத அரசு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இக்கண்காட்சி இன்று 02.10.25 முதல் 17.10.25 வரை 16 நாட்கள் தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் மகாத்மா காந்தி புகைப்படம் இடம்பெற்ற பட்டுசேலையை காட்சிப்படுத்தினர். மேலும், பழமையான கைத்தறி இயந்திரம் காட்சிப்படுத்தப்பட்டது. கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தொடங்கி வைத்தார். கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர்.

error: Content is protected !!