Skip to content

புதிய மா.செ. யார்… ?… திருச்சி திமுகவில் பரபரப்பு..

  • by Authour

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஆளுங்கட்சியான திமுக தேர்தலையொட்டி  ” உடன்பிறப்பே வா”, உங்களுடன் ஸ்டாலின் , உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் உடன்பிறப்பே வா” என  தொகுதி வாரியாக நிர்வாகிகள் சந்திப்பு நிகழச்சியை திமுக தலைவர் முக.ஸ்டாலின் நடத்தி வருகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த ஆய்வு நிகழ்ச்சியில் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதி  திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர்களும் எம்எல்ஏவுமான காடுவெட்டி தியாகராஜன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். முதல்வரும் திமுக தலைவருமான முக. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் முதன்மை செயலாளருமான கே.என்.நேரு கலந்து கொண்டார்.

ஒவ்வொரு நிர்வாகிகளையும் ஸ்டாலின் அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது  மாவட்ட செயலாளர் தியாகராஜன் மீது நிர்வாகிகள் பல்வேறு புகார்களை கூறியதாக தெரிகிறது.குறிப்பாக கட்சி பொறுப்புகளுக்கு பணம் வாங்கப்பட்டதாக சிலர் கூறினர். அனைவரிடமும் கருத்துகளை கேட்ட தலைவர் ஸ்டாலின் மாவட்ட செயலாளரான தியாகராஜனிடம் பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளன. இதே நிலை  தொடர்ந்தால் பதவியை எடுத்துவிடுவேன் என கடுமையாக எச்சரித்ததாக தெரிகிறது. இந்நிலையில் திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மாற்றப்படவுள்ளதாக திமுக வட்டாரத்தில் தகவல் வௌியாகியுள்ளது.அவ்வாறு மாற்றப்பட்டால் யாருக்கு மாவட்ட செயலாளர் பதவி எனவும் கேள்வி எழுந்துள்ளது. பெரம்பலூர் எம்பியும் அமைச்சர் நேருவின் ம கனுமான கே.என்.அருண் மற்றும் மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் ஆகியோர் இந்த போட்டியில் உள்ளதாகவும் புதிய மாவட்ட செயலாளர் அறிவிப்பு இந்நேரம் வந்திருக்க வேண்டும். கரூர் சம்பவம் நடந்து விட்டதால் புதிய மா.செ அறிவிப்பு காலதாமதம் ஆகியுள்ளதாக அறிவாலயம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!