கோவை, பொள்ளாச்சி கோட்டூர் சாலை தங்கம் தியேட்டர் எதிரில் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அதிமுக நிர்வாகிகள் சார்பில் கடந்த 1995 ஆம் ஆண்டு அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் சிலை நிறுவப்பட்டது .எம்ஜிஆரின், பிறந்த நாள், நினைவு நாள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றவுடன் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர் . பொள்ளாச்சியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு
நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறுவாக இருக்கும் எம் ஜி ஆர் சிலையை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து நீதிமன்றம் சிலையை அகற்ற உத்தரவிட்டது . இதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் சிலையை தாங்களாகவே முன்வந்து அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்
அதிமுக நிர்வாகிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினர். இதனையடுத்து இன்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காவல்துறையினர் பாதுகாப்போடு அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பத்திரமாக எம்ஜிஆர் சிலையை
அகற்றினர் . 30 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் பகுதியின் அடையாளமாகவும், அதிமுக தொண்டர்களின் சிம்ம சொப்பனமாக கம்பீரமாக காட்சியளித்த எம்.ஜி.ஆர் சிலை அகற்றப்பட்ட காட்சி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட எம்ஜிஆர் சிலையை அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்தி வந்தனர் நீதிமன்றத்தில் தனி நபர் தொடர்ந்த வழக்கு இன்று நாங்களாகவே கனத்த இதயத்துடன் கண்ணீர் மல்க இந்த சிலையை அகற்றி உள்ளோம் . அனைத்து தரப்பு மக்களின் நெஞ்சங்களிலும் நிறைந்திருக்கும் தலைவர் எம்ஜிஆர் இன்று அரசியலுக்கு வருபவர்கள் கூட அவர் பெயரைச் சொல்லித்தான் அரசியல் நடத்த வேண்டிய நிலை உள்ளது. அரசிடம் மாற்று இடம் கேட்டு அந்த இடத்தில் மீண்டும் எம்ஜிஆர் சிலையை அமைப்போம் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
