கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா கரிச்சிப்பட்டியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சக்திவேல் 38. இவர் குளித்தலை அருகே தெப்பக்குளத்தெருவில் கருப்புசாமி கோவில் ஒன்றை அமைத்து மாந்தரீக பூசாரி வேலை செய்து வந்துள்ளார்.
இவரிடம் திருச்சி மாவட்டம் திருவரம்பூர் கீழக்குறிச்சியை சேர்ந்தவர் பிரவீனா 26. இவர் MSW முடித்துள்ளார். இவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற முடியாததால். கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மாந்தரீக பூசாரி சக்திவேலை பலரும் கூறியதால் அவரை அணுகியுள்ளார்.
அப்போது பிரவீனா தாயார் செல்வராணிக்கு பேய் பிடித்துள்ளதாகவும் வீட்டில் புதையல் இருப்பதாகவும் அதை சரி செய்வதற்கு ரூ.10 லட்சம் செலவாகிவிடும் என்று கேட்டுள்ளனர். குறைத்து சொல்லும்படி பிரவீனா கேட்டதற்கு ஜிபே மூலம் ரூபாய்.5,50,000 அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் சக்திவேல் பிரவீனா வீட்டிற்கு சென்று மாந்திரீகம் செய்ததாகவும் அதன் பின்னர் உடல்நிலை சரியாகாததால் மருத்துவரிடம் சென்று தனது தாயாருக்கு உடல்நிலை சரி செய்து கொண்டதாகவும் அதன் பின்னர் சக்திவேலிடம் கொடுத்த பணத்தை தரும்படி கேட்டுள்ளார். அதற்கு சக்திவேல் தகாத வார்த்தையால் திட்டி கையால் அடித்து கருப்புசாமிக்கு வெட்டி பலிகடா கொடுத்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரவீனா அளித்த புகாரின் பேரில் 7 பிரிவின் கீழ் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குளித்தலை கிளை சிறையில் அடைத்தனர்.