திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள திருவானைக்காவல் பகுதியில் அமைச்சர் கே.என்.நேரு சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த நபருக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டு நிலை தடுமாறினார்.
இதை கண்டதும் உடனடியாக அவரை மீட்டு ஆசுவாசப்படுத்தி முதலுதவி சிகிச்சைகள்
அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் மேலும் அவரது சிகிச்சைக்கு தேவையான நிதி உதவியை வழங்கியதோடு, உயிர் பாதுகாப்பில் கவனத்துடனும், அக்கறையுடனும் செயல்படுமாறு அறிவுறுத்தினார்.