ராமதாஸ்க்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. இன்று காலை டாக்டர் ராமதாசுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்படுகிறது. செங்குட்டுவேல் தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்த பரிசோதனையை அவருக்கு மேற்கொள்ள உள்ளனர். ராமதாஸ்க்கு ஏற்கனவே, கடந்த 2013-ஆம் ஆண்டு இதே மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ராமதாஸ் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தந்தை ராமதாஸை சந்திக்க அன்புமணி மருத்துவமனைக்கு வருகை தந்துளார்.
இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நேற்று மாலை டாக்டர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று காலை ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்த குளாய்கள் நன்றாக இருக்கிறது. பயப்படுவதற்கு எதுவும் இல்லை. அய்யாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும். தொடர்ந்து கொடுக்கின்ற மாத்திரைகளை எடுக்க வேண்டும். மற்றபடி பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஐசியூவில் உள்ளதால் அவரை பார்க்க முடியவில்லை. இன்னும் 6 மணி நேரம் ஐசியூவில் இருப்பார். மருத்துவர்களிடன் நான் பேசினேன். இவ்வாறு அவர் கூறினார்.