Skip to content

பொதுக்கூட்டம் நடத்துவது விஐய்க்கு நல்லது…சீமான் அட்வைஸ்

: கரூரில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, (நாதக) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான கருத்துகளைப் தெரிவித்துள்ளார். “பரப்புரை முறைகளை நிறுத்திவிட்டு பொதுக்கூட்டமாக நடத்துவது விஜய்க்கு நல்லது. விஜய் வந்தது பிரச்சனைக்கு காரணம் என்றால் அவர்தான் முழு பொறுப்பேற்க வேண்டும்” என்று சீமான் கூறியுள்ளார்.

மேலும், “விஜயை எப்படியாவது கூட்டணிக்குள் இழுத்து வர பாஜக முயற்சி” என்றும் விமர்சித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் “துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம்” என்று தெரிவித்தார். இருப்பினும், விஜயின் பேச்சு முறையை விமர்சித்து, “கரூர் பரப்புரை தொடங்குவதற்கு முன்பு காவல்துறைக்கு நன்றி சொல்லிதான் விஜய் தனது பேச்சை தொடங்குகிறார். சாவு விழுந்தவுடன் அதே காவல்துறை மீது பழி போடுகிறார்” என்று குற்றம் சாட்டினார்.

போலீசார், “தவெக கேட்ட மற்ற இடங்களை விட வேலுச்சாமிபுரம் பெரியதாக இருந்ததால் அதனைத் தந்ததாக” கூறியதாகவும் சீமான் சுட்டிக்காட்டினார். சம்பவத்தின் அரசியல் பின்னணியைத் தொடர்ந்து விமர்சித்த சீமான், “பொதுக்கூட்டம் நடத்துவது விஜய்க்கு நல்லது” என்று மீண்டும் வலியுறுத்தினார். “விஜய் வந்தது பிரச்சனைக்கு காரணம் என்றால் அவர் முழு பொறுப்பேற்க வேண்டும்.

மேலும், “இனி விஜய் எந்த கூட்டத்துக்கும் சென்றாலும் அங்கு கலவரத்தை ஏற்படுத்துவேன். கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தைப் போல் விஜய் போனதால்தான் கலவரம் என்று நான் அனைவரையும் நம்ப வைப்பேன். அப்போதுதான் நடிகர் பின்னால் கூட்டம் செல்லாது” என்று அறிவித்தார்.

error: Content is protected !!