கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த சுற்றுச்சுவர் கடந்த 2024 வருடம் நெடுஞ்சாலை துறையினர் சாலை பணியின் பொழுது இடித்து அப்புறப்படுத்தியுள்ளனர். பிறகு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவப் பயனாளிகள் அன்றாடம் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த நிலையில் இரண்டு நாளாக தொடர் கனமழை காரணமாக மீதமுள்ள சுற்றுச்சூழும் தற்பொழுது இடிந்து விழுந்து உள்ளது. இதன் இடிபாடுகளில் சிக்கி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டி மற்றும் மின்கம்பம், இருசக்கர வாகனங்கள், மருத்துவமனை சார்பில் வைக்கப்பட்டிருந்த போர்டுகள் 0 ஆகியன சேதமடைந்துள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் இல்லாமல் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள பகுதிகளில் மருத்துவர்கள் மருத்துவ பயனாளிகள் என அனைத்து தரப்பினரும் இருசக்கர வாகனங்கள்
நிறுத்தி வைத்து விட்டு செல்கின்றனர். எனவே இதற்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் பலமுறை மருத்துவமனை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றும் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
சுவரை இடித்தது நெடுஞ்சாலைத் துறையினர் என்பதால் அவர்களே பொறுப்பு என மருத்துவத்துறையினர் தெரிவிப்பதும், நெடுஞ்சாலை துறையினர் இது எங்களுக்கு சம்பந்தமில்லாதது மருத்துவத்துறை தான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தெரிவித்து பொறுப்பற்ற முறையில் உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக பலமுறை மாநகராட்சி மாமன்ற கூட்டத்திலும் வார்டு கவுன்சிலர்கள் பேசி இருந்தும் எந்தப் பயனும் இல்லாமல் தற்போது மீதம் இருந்த சுற்றுச்சுவரும் மழைக்கு இடிந்து கீழே விழுந்துள்ளது.
இது முற்றிலும் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் பொறுப்பெற்ற நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்படுவது பொதுமக்களும் மருத்துவ பயனாளிகளுமே என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் எடுத்துக் கொண்டு முன்னுரிமையோடு போர்க்கால அடிப்படையில் இதற்கு சுற்றுச் சுவர் அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.