திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஆலிவட்டம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன்கள் கோவிந்தசாமி மற்றும் சௌந்தர்(48) இவர்களுக்கு 75 சென்ட் அளவிலான பொது சொத்து உள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பொதுசொத்தில் உள்ள கிணற்றில் பைப் அமைத்து கொள்வதாக கோவிந்தராஜின் தம்பியான சௌந்தர் கோவிந்தராஜனின் மகன் திருமால்(28) என்பதரிடம் கேட்டுள்ளார். அதற்கு திருமால் இன்னும் சொத்துபிரிக்கவில்லை சொத்து பிரிக்கும் வரை அதில் பைப் அமைக்க கூடாது என கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று பழிவாங்கும் நோக்கில குடிபோதையில் சென்ற சௌந்தர் அண்ணன் மகனான திருமாலின் வீட்டிற்கு சென்று திருமாலின் முகத்தில் சித்தப்பா சௌந்தர் மிளகாய்பொடி தூவி கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். பின்னர் அங்கிருந்து திருமால் தப்பி ஓடியுள்ளார்.
அதன் பின்னர் திருமாலின் மனைவி இந்து( 25 )மற்றும் அவருடைய இரண்டு குழந்தைகளை அவதூறாக பேசி சௌந்தர் தாக்கியுள்ளார். அதன் பின்னர் இந்துவின் கழுத்தில் கத்தியை வைத்து உன் கணவரை வரச்சொல் இல்லையென்றால் உன்னை தீர்த்து கட்டி விடுவேன் என மிரட்டியுள்ளார்.
பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக விரைந்து சௌந்தரை தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் மது போதையில் இருந்த சௌந்தர்
நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் தனக்கு மயக்கம் வருவதாக கூறி சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். மேலும் மேல்சிகிச்சைக்காக சௌந்தரை இன்று காலை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சொத்துக்காக அண்ணன் மருமகள் கழுத்தில் கத்தியை வைத்து தீர்த்து கட்டி விடுவேன் என சின்னமாமனார் மது போதையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.