கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த 27ஆம் தேதி தவெக பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் இதில் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பெருமாள் – செல்வராணி தம்பதியரின் மகள்களான பழனியம்மாள், கோகிலா இருவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்த மாணவிகள் இருவரும் படித்து வந்த ரெட்டிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் சகோதரிகள் இருவரது புகைப்படங்களையும் வைத்து, தலைமை ஆசிரியர் சகிலா தலைமையில் ஆசிரியர்கள் மற்றும் சக
மாணவர்கள் மலரஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் பெற்றோரும் கலந்து கொண்டனர். அப்போது இறந்த தனது அக்கா இருவரும் இன்று பள்ளிக்கு வராத வருத்தத்தில், அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்தவரும் மாணவன் லோகேஸ்வரன் மலரஞ்சலி செலுத்திவிட்டு, அக்கா இருவரும் மறைந்த துயரில் தேம்பி தேம்பி அழுதபோது, அருகில் இருந்தவர்கள் ஆறுதல் சொல்லி தேற்றினர்.