Skip to content

அரசு பஸ் படிகட்டில் தொங்கியபடி பயணிக்கும் கல்லூரி மாணவ-மாணவிகள்

கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து தான்தோன்றி மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக வெள்ளியணை,
காணியாளம்பட்டி, மாமரத்துப்பட்டி பகுதிக்கு அரசு பேருந்து சென்று வருகிறது. இந்த நிலையில் கரூரில் இருந்து தான்தோன்றி மலை அரசு கல்லூரி வழியாக சென்ற TN 45 N 3568 என்ற பதிவு எண் கொண்ட 2A மகளிர் பயணம் செய்யும் கட்டணமில்லா பேருந்து 6.40 மணிக்கு சென்ற அரசு பேருந்தில் வேலை முடிந்து வீடு செல்லும் பொதுமக்கள், கல்லூரி முடிந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பயணம் செய்து செய்தனர்.

அந்த நேரத்திற்கு வேறு அரசு பேருந்து இல்லாததால் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் தொங்கியபடி பயணம் செய்தனர். அதே நேரத்தில் வேறு பேருந்து இல்லாததால்

வேறு வழி இல்லாமல் அரசு பேருந்தில் பயணம் செய்வதாக பேருந்தில் பயணித்த பெண்கள் முணுமுணுத்தவாறு படிக்கட்டு தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.

படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால் உடனடியாக போக்குவரத்து துறை கூடுதல் பேருந்து இயக்கி விபத்தை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

error: Content is protected !!