பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் அம்சவேணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
பெற்றெடுத்து அன்பு செலுத்தி வளர்த்த அன்னையை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க.வின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் அனைவர்க்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.