காந்தாரா படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகம் காந்தாரா சாப்டர் 1 என்கிற பெயரில் சமீபத்தில் வெளியானது. இந்த படம் உலகளாவிய ரீதியில் வெளியிடப்பட்டு, பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
முதல் பாகம் எந்த அளவுக்கு விமர்சனத்தை பெற்றதோ அதை விட பல மடங்கு அதிகமாக மக்களுக்கு மத்தியில் விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனம் சிறப்பாக கிடைத்து வருவதன் காரணமாக படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, வெளியான முதல் நான்கு நாட்களில் படம் கணிசமான வசூலைப் பெற்றுள்ளது. இது படத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும் முதல் அறிகுறியாகக் கருதப்படுகிறது.
படத்தின் உலகளாவிய வசூல் ரூபாய் 335 கோடியைத் தாண்டியுள்ளது. இந்த வசூல், வெளியான முதல் நான்கு நாட்களுக்கான மொத்த தொகையாகும். படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்பட்டதால், இந்தியாவுக்குள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல விற்பனையைப் பெற்றுள்ளது. வரவேற்பு சிறப்பாக கிடைத்து வருவதன் காரணமாக இந்த வசூலை இன்னும் அதிகரிக்கும் எனக் கணிக்கின்றன.
படக்குழுவினர் இந்த வசூல் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவு பற்றி நன்றி தெரிவித்துள்ளனர். இந்த வெற்றி, படத்தின் தொடர்ச்சி பகுதியாக உருவாக்கப்பட்டதால், முந்தைய படத்தின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளது. மொத்தமாக 150 கோடி செலவில் எடுக்கப்பட்ட காந்தாரா இரண்டாவது பாகம் வெளியான 4 நாட்களில் பட்ஜெட்டை மீட்டெடுத்துள்ளது தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.