தமிழ்நாடு ஃப்ளையஷ் செங்கல் மற்றும் பிளாக்ஸ் உற்பத்தி சங்கத்தின் மாநில உயர்மட்ட குழு கூட்டம் மாநிலத் தலைவர் பொறியாளர் சிவக்குமார் தலைமையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் சதீஷ்குமார், தமிழ்ச்செல்வன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு முன்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில தலைவர் பொறியாளர் சிவகுமார்
சமீபத்தில் மத்திய அரசு வரியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். வரியில் 4கட்டமாக இருந்தது தற்போது 5மற்றும் 18சதவீதம் என 2கட்டமாக மாற்றி உள்ளனர். எங்களது (சிமெண்டில் இருந்து தயாரிக்கப்படும்) சாம்பல் செங்கல் 12சதவீதம் வரியல் செயல்பட்டு வருகிறது. கட்டுமான பொருட்களில் சாம்பல் செங்கல், மற்றும் செம்மண்ணிலிருந்து தயாரிக்கப்படும் செங்கல் ஆகியவைகளுக்கு 12சதவீதமாக தொடர்ந்து உள்ளது.
இதில் சிமெண்ட் 28சதவீதத்திலிருந்து 18சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது எங்களது தயாரிப்புகளை 12சதவீதம் வரியில் விற்பனை செய்ய வேண்டும் என்றால் அதற்கு விலை உயர்த்தி வழங்க வேண்டிய சூழல் எங்களுக்கு உள்ளது. வரி 12சதவீதத்திலிருந்து ஐந்து சதவீதமாக குறைப்பது தொடர்பாக மாநில அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராம் ஆகியோரை சந்தித்து இந்தக் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளோம்.
இதனை பாரத பிரதமருக்கும் கோரிக்கை வைத்துள்ளோம்.
பெரும்பாலான கட்டுமான சங்கங்கள் கட்டுமான பொருட்களைக் அத்தியாவசிய விலைப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இத்தொழிலுக்கு வர வேண்டும் என அரசு பயிற்சி அளித்து கடன் உதவி அளித்து எங்களை வரவேற்றது. தற்பொழுது எங்களது தயாரிப்புகளுக்கு மூலப் பொருட்களே மிகப்பெரிய சிக்கலில் உள்ளது.
உலர் சாம்பல் ஒதுக்கீடு இலவசம் இருந்தது. தற்போது டெண்டர் கொடுத்து எடுக்கும் நிலையில் உள்ளது, வரியும் சேர்ப்பதால் மிகுந்த கஷ்டமாக உள்ளது.தற்போது விலையேற்றத்தை நாங்கள் நிறுத்தி வைத்திருக்கிறோம்.
சிமெண்ட் செங்கல் மற்றும் செங்கல் இரண்டிற்கும் தற்போது 12சதவீத தான் உள்ளது. அரசு சிமெண்டிற்கு விலை குறைத்து இருந்தாலும் எங்களது சாம்பல் சிமெண்டிற்கு வரி குறைத்தால் தான் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சாம்பல்செங்கல் வழங்க முடியும் என தெரிவித்தார்.