Skip to content

கோவை அம்மன் கோவிலில் நுழைந்து சிக்கி தவித்த யானை..

கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசிபுரம் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்து உள்ள தானிக்கண்டி எனப்படும் மலைவாழ் கிராமம். இங்க வாழும் மலைவாழ் பழங்குடியின மக்கள் வணங்கக் கூடிய அம்மன் கோவில் அருகே உள்ளது. நேற்று இரவு உணவு தேடி கொண்டு அந்த கோயிலுக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானையானது வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தது.

உடனடியாக அங்கு வந்த வனத்துறையினர் யானையை அங்கு இருந்து விரட்ட பட்டாசு வெடித்தும், சத்தம் எழுப்பியும் முயற்சி செய்தனர் , உள்ளே சிக்கிய யானை சிறிது நேரம் கழித்து ஒரு வழியாக வெளியே வந்தது, வெளிய வந்த யானையை காட்டுக்குள் விரட்ட வனத் துறையினரும் வேட்டை தடுப்பு வீரர்களும் பட்டாசு வெடித்தனர். சிறிது நேரம் அங்கும், இங்கும் போக்கு காட்டிய யானையானது வனத்திற்குள் விரட்டப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வினால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!