கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெகவின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவானது கடந்த 2 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்,
இன்று 3வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது வேலுச்சாமிபுரம் பகுதியில் உயிரிழப்பு அதிகமாக ஏற்பட்ட இடங்களில் இருந்த அனைத்து காலணிகளையும் அகற்றப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு வந்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், அப்பகுதியை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆய்வில் வடக்கு மண்டல பகுதியைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் உட்பட 15க்கும் மேற்பட்ட காவலர்கள் உயிரிழப்பு ஏற்பட்ட பகுதியில் மரங்கள், தகரக் கொட்டகை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்பு காவல்துறை வாகனம் மூலம் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.