தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது .இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் இன்று காலை பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
திருச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வானம் கடும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.இந்த நிலையில் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் மழை பெய்தது.*
திருச்சி மாநகர் பகுதிகளான சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், கண்டோன்மெண்ட், பாலக்கரை, விமான நிலையம், கே.கே.நகர், மெயின்கார்டுகேட், உறையூர், தில்லை நகர், ஆகிய இடங்களிலும் திருச்சி புறநகர் பகுதியான திருவெறும்பூர் , மண்ணச்சநல்லூர், முத்தரசநல்லூர், ராம்ஜி நகர், நவலூர் குட்டப்பட்டு, மணிகண்டம், ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. திருச்சியில நல்ல மழை பெய்த காரணத்தால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழ்ல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.