Skip to content

7 பெண்கள் உள்பட 16 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள், வன பகுதிகளில் பதுங்கி கொண்டு தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமவாசிகள், அரசியல் தலைவர்களை இலக்காக கொண்டு அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சத்தீஷ்காரின் நாராயணபூர் மாவட்டத்தில் 7 பெண்கள் உள்பட 16 நக்சலைட்டுகள் ஆயுதங்களை விடுத்து போலீசில் இன்று சரண் அடைந்தனர். அவர்களில் 9 பேர் பற்றிய தகவல் அளிப்போருக்கு ஒட்டுமொத்தத்தில் ரூ.48 லட்சம் பரிசு தொகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 20 மாதங்களில், 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் சரகத்தில் 1,837 மாவோயிஸ்டுகள் சரண் அடைந்துள்ளனர்.

 

error: Content is protected !!