சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டுக்கு இன்று அதிகாலை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறையை செல்ஃபோனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், விஜயின் இல்லத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விஜய் வீட்டுக்கு விரைந்த போலீசார், அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவல் புரளி எனவும் தெரிய வந்தது. இந்த புரளியை கிளப்பிய மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், சில வாரங்களுக்கு முன்பும் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது அப்போதும் காவல்துறையினர் விஜய் வீட்டில் சோதனை செய்ததில் அது புரளி என தெரியவந்தது.