தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் பால் வியாபாரி சென்ற டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் பால் வியாபாரி அசோக்குமார் (55)சம்பவ இடத்திலேயே பலி. நாச்சியார்கோவில் காவல் நிலையத்தார் விசாரணை. கும்பகோணம் அருகே கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (55) பால் வியாபாரி.
இவர் வழக்கம் போல் நேற்று இரவு நாச்சியார்கோவில் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் விநியோகம் செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் பொழுது நாச்சியார்கோவில் வண்டி பேட்டை என்ற இடத்தில் எதிரே வந்த லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அசோக் குமார் பலியானார் .
இது குறித்து தகவல் அறிந்து விரைத்து வந்த நாச்சியார்கோவில் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக நாச்சியார் கோவில் பகுதியில் சிறிது நேரம் வாகன நெரிசல் ஏற்பட்டது.