Skip to content

திருச்சியில் 916 பேருக்கு பட்டாக்கள் வழங்கிய அமைச்சர்கள்

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட தில்லை நகர் மக்கள் மன்றம்,தென்னூர் உழவர் சந்தை,திருச்சி பெரிய மிளகு பாறை ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பட்டாக்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இந்நிகழ்வுகளில்
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் ஆகியோர் கலந்துகொண்டு,மக்கள் மன்றத்தில் ரூ 4. 47 கோடி மதிப்பில் 75 பேருக்கும்,தென்னூர் உழவர் சந்தையில் ரூ. 7.44 கோடி மதிப்பில் 320 பேருக்கும்,திருச்சி பெரிய மிளகு பாறையில் ரூ 134.72 கோடியில் 521 பேருக்கும் பட்டாக்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில், மாவட்ட கலெக்டர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன் ,திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் வைரமணி , மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.சேஷத்ரிமயும் தீபிசானு, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அருள். வட்டாட்சியர் பிரகாஷ், நகரபொறியாளர் சிவபாதம், மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் வைரமணி, மாநகராட்சி உதவி ஆணையர்கள் சண்முகம்,சென்னுகிருஷ்ணன், மண்டலக் குழ தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன் துர்கா தேவி, மாமன்ற உறுப்பினர்கள் கலைச்செல்வி,.கமால் முஸ்தபா, புஷ்பராஜ், பைஸ் அகமது, ராமதாஸ், மண்டி சேகர்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ்,பகுதிச் செயலாளர்கள் மோகன் தாஸ், நாகராஜ்,முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன்,மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது,வட்டச் செயலாளர்கள் வாமடம் சுரேஷ் புத்தூர் பவுல்ராஜ்,மூவேந்திரன்.முன்னாள் கவுன்சிலர் கவிதா மாநகராட்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!