கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் ஏற்பட்டு மயக்கமடைந்த மக்களை ஆம்புலன்ஸில் ஏற்றி சென்றனர். அப்போது ஆம்புலன்ஸ் வாகனங்களை தவெக தொண்டர்கள் நிறுத்தி விசாரித்த போது, தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் சமாதானம் செய்வதற்காக உடன் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த வீடியோக்களில் இருந்ததாக கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசனை கரூர் நகர காவல்துறையினர் இன்று பிற்பகல் சேலத்தில் வைத்து கைது செய்தனர் கைது செய்யப்பட்ட வெங்கடேசனை தற்போது கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். வெங்கடேசன் மீது கொலை மிரட்டல், பொது சொத்துக்களை சேதப்படுத்துதல், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசனுக்கு அக்டோபர் 23ஆம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவு.
நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து வெங்கடேசனை திருச்சி மத்திய சிறையில் அடைக்க கரூர் போலீசார் அழைத்துச் சென்றனர்.