Skip to content

வால்பாறை அருகே வாலிபரை தாக்கிய கரடி….பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இஞ்சிபாறை எஸ்டேட்டில் வசித்து வருபவர் கம்பெனியின் சிறுகுன்ற ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்கல் ஆக பணி புரியும் காளீஸ்வரன் வயது 29 த/பெ செல்வராஜ் இவர் இஞ்சிப்பாறையில் தன்னுடைய மனைவிகளுடன் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில் பணி முடிந்து இரவு 8½ மணி அளவில் பேருந்தை விட்டு இறங்கி இவர் வீட்டுக்கு செல்லும்போது தேயிலை காட்டிற்குள் பதுங்கி இருந்த கரடி ஒன்று அவரை துரத்தி வலது புறம் தலையில் தாக்கியுள்ளது. இதனால் அவர் படுகாயம் அடைந்தார் உடன் வந்தவர்கள் கரடியிடம் போராடி அவரை மீட்டனர் உடனடியாக அவரைக்

காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி செய்யப்பட்டது தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் காயம் அடைந்த வரை ஆறுதல் கூறி அவருக்கு முதலுதவி செய்வதற்கான முன்பணமாக பத்தாயிரம் ரூபாய் வானவர் முத்துமாணிக்கம் வழங்கினார் அவரை மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சம்பவம் பற்றி வால்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இஞ்சிபாறை பகுதியில் ஏராளமான கரடிகள் சுற்றித் திரிவதால் அதனை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைக்கின்றனர் மேலும் கரடி நடமாட்டம் அதிகமாக உள்ளதால் எஸ்டேட் தொழிலாளர்கள் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!