திருப்பத்தூர் மாவட்டம், முழுவதும் கடந்த சில தினங்களாகவே தொடர் கன மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு திடீரென சூறைக்காற்றுடன் கூடிய பெய்த கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டு இரட்டைமலை சீனிவாச பேட்டை பகுதியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த புளியமரம் முறிந்து சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஷேர் ஆட்டோ மற்றும் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் மீது விழுந்ததில் ஷேர் ஆட்டோ மற்றும் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் மின்கம்பி சேதமடைந்ததுள்ளது. இதனால் அப்பகுதியில் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் தினந்தோறும் அவ்வழியாக பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்லும் ஆண்கள் பெண்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என ஆயிரக்கணக்கான மக்கள் அவ்வழியாக சென்று வரும் நிலையில் சாலையின் முறிந்து விழுந்த புளிய மரத்தால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல்லும் பெண்கள் ஆண்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் சிரமப்பட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் அந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மின்சாரம் இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.