Skip to content

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்… அரியலூரில் மாணவ-மாணவிகளுக்கு விழிப்பணர்வு

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் R. முத்தமிழ்ச்செல்வன் வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர், மற்றும் இணைய குற்றப்பிரிவு காவல்துறையினர், சமூக நீதி & மனித உரிமைகள் பிரிவு காவல்துறையினர் இணைந்து அரியலூர் மாவட்டம் கருப்பூர் நெல்லியாண்டவர் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு, கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு, போக்சோ சட்டம், குழந்தை திருமணம் இணைய குற்றங்கள், போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள், காவல் உதவி செயலி மற்றும் தீண்டாமைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இந்நிகழ்வில் இணைய குற்ற பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் சமூக நீதி & மனித உரிமைகள் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுமதி மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

error: Content is protected !!