தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று மக்களுடன் கலந்துரையாடினார். மக்களின் கருத்துக்களை கேட்ட முதலமைச்சர் மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.
பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் காணொளி வாயிலாக இணைந்து 12000க்கும் மேற்பட்ட கிராம சபைகளில் சிறப்புரையாற்றினார். மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு சேவை செய் எனும் பேரறிஞர் அண்ணா காட்டிய பாதையில் திராவிட மாடல் அரசு சமூகநீதி, சமத்துவம், சமதர்மம் ஆகிய இலட்சியங்களுடன் செயலாற்றுவதைச் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மக்களுடன் இணைந்து செயலாற்றிவருகிறார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, பெரியளவிலான கட்டுமானத் திட்டங்கள் மட்டுமின்றி, நான் முதல்வன் போன்ற முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி, தமிழ்நாட்டை புதிய உயரங்களுக்கு இட்டுச்செல்கிறார்.
இவ்வணுகுமுறையின் தொடர்ச்சியாகத்தான் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படையான பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கிவைத்தார். மக்கள் தாங்கள் உள்ளூர் அளவில் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் மிகக் குறுகிய காலத்தில் தீர்வு கண்டு வருகின்றனர். இத்திட்டம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு தமிழ்நாட்டு ஆட்சிமுறையில் ஒரு புதியப் பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.
மீண்டும் ஒரு முறை தமிழ்நாட்டில் இருக்கிற ஒவ்வொரு மனிதரையும் சென்றடையும் திட்டத்தோடு வந்திருக்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். நகரம், கிராமம், பெரிய ஊர், சிறிய ஊர் என்று எங்கிருந்தாலும் தமிழ்நாட்டில் இருக்கிற எந்தஒரு குடிமகனின் குரலும் விடுபட்டுவிடக்கூடாது எனும் ஜனநாயக மாண்போடு இத்திட்டத்தை செயல்படுத்துகிறார்.
நம்ம ஊரு-நம்ம அரசு எனும் திராவிட மாடல் அரசின் திட்டம் மூலம் கிராம அளவில் மக்களுக்கு தேவையான உடனடியாக தீர்க்கப்படக் கூடிய மூன்று திட்டங்கள் நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளார். இதனை கிராமசபைகளில் தீர்மானமாக இயற்ற வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறிய அளவிலான இடங்களிலும் உள்ள உட்கட்டமைப்பு வசதிப் பிரச்சனைகளைக்கு பயனுள்ள, உறுதியான தீர்வுகளை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
மக்கள் பங்கேற்போடு வளர்ச்சியை உறுதிசெய்வதுதான் திராவிட மாடல் அரசு! கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை! என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.