Skip to content

முதியோர் தினவிழாவில் கலெக்டர் நடனம்… முதியோர்கள் நெகிழ்ச்சி..

திருப்பத்தூர் மாவட்டம், பாச்சல் பகுதியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இயங்கி வரும் முதியோர் மற்றும் பெண்கள் காப்பகத்தில் முதியோர் தின கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி கலந்து கொண்டு முதியோர்களுக்கு மலர் மகுடம் சூட்டி, ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். பின்னர் முதியோர்கள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடினர். அதனைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் உற்சாகம் அடைந்து மீண்டும் அதே பாடலுக்கு

முதியோர்களுடன் கை கோர்த்து கொண்டு சினிமா பாடலுக்கு நடனம் ஆடினார். இதனால் முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் உற்சாகம் அடைந்தனர். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் நடனம் ஆடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

error: Content is protected !!