Skip to content

பஹ்ரைன்-ல் குதிரை உயரம் தாண்டுதல் போட்டி.. கோவையில் பயிற்சி பெரும் மாணவர் தேர்வு..

சர்வதேச அளவில் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான குதிரை உயரம் தாண்டுதல் போட்டி பஹ்ரைன் நாட்டில் இந்த மாதம் நடைபெற உள்ளது..

உலக அளவில் பிரபலமான இந்த போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்தும் குதிரையேற்ற வீரர்கள் கலந்து கொள்கின்றனர்..

இந்நிலையில் இந்த போட்டியில் 18 வயதிற்கு உட்பட்டோருக்கான ஷோ ஜம்பிங் எனும் குதிரையேற்ற போட்டியில் திருப்பூரை சேர்ந்த ஹர்ஷித் எனும் மாணவர் தேர்வாகி உள்ளார்..

கோவையில் உள்ள கோவை ஸ்டேபிள்ஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும், ஹர்ஷித் மற்றும் அவரது பயிற்சியாளரான

கோவை ஸ்டேபிள்ஸ் குதிரையேற்ற பயிற்சி மையத்தின் இயக்குனர் சரவணன் ஆகியோர் கூறுகையில், அக்டோபர் மாதம் 24 ந்தேதி பஹ்ரைனில் நடைபெறும் போட்டியில் இந்தியா சார்பாக தென்னிந்திய அளவில் ஒரே வீர்ராக கலந்து கொள்வதில் தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்..

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள கோவை ஸ்டேபிள்ஸ் குதிரையேற்ற பயிற்சி மையத்தில் நீண்ட காலமாக பயிற்சி பெற்று வரும் அர்ஷித் ஏற்கனவே தேசிய சர்வதேச குதிரையேற்ற போட்டிகளில் பங்கு பெற்றுள்ளதாக சரவணன் தெரிவித்தார்..

பஹ்ரைன் நாட்டில் ‘ யங் ஏசியன் சாம்பியன்ஷிப் ஆசிய அளவிலான போட்டியில் இந்திய அளவில் நான்கு பேர் கலந்து கொள்ள உள்ள நிலையி்ல் தென்னிந்தியாவில் இருந்து ஒரே வீரராக ஹர்ஷித் தேர்வாகி உள்ளது குறிப்பிடதக்கது….

error: Content is protected !!