நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் கீழத்தெருவை சேர்ந்தவர் புரட்சிதாசன். இவருடைய மகன் தீபராஜ் (13). திருப்பூண்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மழை பெய்து கொண்டிருந்தபோது தீபராஜ் வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தபோது தீபராஜ் மீது திடீரென மின்னல் தாக்கியது.
இதில் மயங்கி விழுந்த சிறுவனை உறவினர்கள் உடனடியாக மீட்டு நாகப்பட்டினம் அருகே உள்ள ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீபராஜூக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தீபராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.