திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி கோவிலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பத்துக்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் பக்தர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு ஸ்ரீரங்கம் கோவில் பிரகாரம், பேட்டரி வாகனங்கள்
மற்றும் அனைத்து முக்கிய இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற சோதனையில் பெரும் சிக்காத நிலையில் இது புரளி என்று தெரிந்தநிலையில் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர் அதன்பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்