Skip to content

கணவருடன் தகராறு…. 2 குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை

  • by Authour

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பருத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா (38). இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 33). இவர்களுக்கு முத்தமிழ் (வயது 4), சுசிலா (வயது 3) என்ற இரு பெண் குழந்தைகள் இருந்துள்ளன. முத்தையாவிற்கும் முத்துலட்சுமிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறும் இருந்து வந்திருக்கிறது.  இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் முத்துலட்சுமி தனது இரு குழந்தைகளையும் அழைத்து சென்று வீட்டின் அருகே உள்ள கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தானும் கிணற்றில் குறித்து தற்கொலை செய்துள்ளார்.

இதையடுத்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் குதித்து இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்த 2 குழந்தைகள் மற்றும் அவரது தாய் மூவரின் உடலையும் அரை மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கயிறு மூலமாக கட்டி மேலே எடுத்தனர். தொடர்ந்து மூவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக கங்கைகொண்டான் காவல்துறையினர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!