Skip to content

சிறுமிக்கு பாலியல் தொல்லை…இந்து மகாசபா தலைவர் கைது…

  • by Authour

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீ என்கிற ஸ்ரீகந்தன். இவர் அகில இந்திய இந்து மகாசபா தலைவராக உள்ளார்.  கோடம்பாக்கம் புலியூரை சேர்ந்த பெண் இவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். அவர் தனது சகோதரன் மகளை அடிக்கடி ஸ்ரீ வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், சிறுமியை கானத்தூரில் உள்ள ஸ்ரீயின் மற்றொரு வீட்டிற்கும் அப்பெண் அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமிக்கு ஸ்ரீ பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை சிறுமிக்கு ஸ்ரீ பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில், தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி வேலூரில் வசிக்கும் தனது தாயாரிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தாயார் உடனடியாக போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஸ்ரீ என்கிற ஸ்ரீ கந்தன் மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் அத்தை ஆகியோரை கைது செய்துள்ளனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!