தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே தூய்மைப் பணிகளை முடித்துக் கொண்டு மாநகராட்சி வாகனத்தில் தூய்மை பணியாளர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மாநகராட்சி வாகனத்தின் பக்கவாட்டில் மீது மோதியது. இதில் மாநகராட்சி வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த இரண்டு தூய்மை பணியாளர்கள் படுகாயம் அடைந்தனர். மினி பிறந்த விவேகமாக ஓட்டி வந்த ஓட்டுநர் தூய்மை பணியாளர்கள்
வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மினி பேருந்து ஓட்டுநர் அப்படிதான் வேகமாக ஓட்டுவோம் – செத்தா போயிட்டீங்க என்று தூய்மை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்க முயன்றார். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது. இதனையடுத்து அங்க வந்து காவல்துறையினர் மினி பேருந்தை காவல் நிலையத்துக்கு எடுத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.