அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கூழாட்டுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையன். இவர் இந்திய பாதுகாப்பு துறை ஊழியராக பணியாற்றி வருகிறார். திருச்சியில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்நிலையில் தனது சொந்த ஊரான கூழாட்டுகுப்பம் கிராமத்தில் புதிய வீடு கட்டிய நிலையில், தனது வீட்டை பூட்டிவிட்டு திருச்சி சென்றுள்ளார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தனது சொந்த ஊருக்கு வந்த
கருப்பையன், வீட்டிற்கு சென்று பார்த்த போது, அவரது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவின் கதவுகள் திறக்கப்பட்டு அதிலிருந்த 7பவுன் நகைகள் மற்றும் பித்தளை பொருள்கள் மற்றும் டிவி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து தா. பழுர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.