Skip to content

தவெக நிர்வாகிகள் கரூர் கோர்ட்டில் ஆஜர்…

  • by Authour

கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்ற தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது. தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கடந்த 30ஆம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு இரண்டு நாள் கஸ்டடி எடுத்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு வழக்கை மாற்றி நேற்று முன் தினம் உத்தரவிட்டிருந்த நிலையில் நேற்றுடன் கரூர் மாவட்ட தவெக மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன்

மற்றும் நிர்வாகி பவுன்ராஜ் ஆகிய இருவருக்கும் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நேற்று நடைபெற்றது.

இந்த வழக்கில் தவெக வழக்கறிஞர்கள் வாதாடிய நிலையில், கட்சி நிர்வாகிகள் ம‌தியழகன் மற்றும் பவுன்ராஜ் காணொலி (Video Conference) மூலமாக நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானனர். விசாரணையை நடத்திய நீதிபதி பரத் குமார், இருவரும் (15.10.2025) காலை நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இன்று பின்னணியில் உள்ள இருவரையும் திருச்சி சிறையில் இருந்து கரூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து இருவரையும் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் பரத் குமார் முன்பு ஆஜர் படுத்தினார். நீதிபதி முன்பு சிறப்பு புலனாய்வு குழு தரப்பு மற்றும் தவெக தரப்பினர் பல்வேறு வாதங்களை முன்வைத்தனர்.

error: Content is protected !!