கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தவெக சார்பில் அந்தந்த மாவட்டங்களில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டுமென அக்கட்சி தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில், கடந்த மாதம் 27ம் தேதி, விஜய் பிரசாரம் செய்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட, 41 பேர், பரிதாபமாக இறந்தனர். இந்தச் சம்பவம், தமிழகம் மட்டுமல்லாது, நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின், த.வெ.க., தலைவர் விஜய், சமூக வலைதளம் வழியே இரங்கல் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டார். தொடர்ந்து, கடந்த 30ம் தேதி, வீடியோ பதிவு வெளியிட்டு, இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தவெக சார்பில் அந்தந்த மாவட்டங்களில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டுமென அக்கட்சி தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். 41 பேரின் படங்களுக்கு மலர்தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு அவர் ஆணையிட்டுள்ளார். தீபாவளிக்கு முன்பே நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் விஜய் கூறியுள்ளார்.