மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் ராஜினாமா செய்துள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மதுரை மாநகராட்சி ஐந்து மண்டல தலைவர்கள் ஏற்கனவே ராஜினாமா செய்யப்பட்ட நிலையில் தற்போது மாநகராட்சி மேயர் இந்திராணிபொன்வசந்த் ராஜினாமா செய்துள்ளார்.மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ராவிடம் தனது ராஜினாமா கடிதத்தை இந்திராணி அளித்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்பது தொடர்பாக வரும் 17ஆம் தேதி மாமன்றக் கூட்டம் நடைபெறுகிறது.
