குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை. கணக்கில் வராத மூன்று லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்
தமிழக முழுவதும் தீபாவளி பண்டிகை காலத்தில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம் மற்றும் கணக்கில் வராமல் பணத்தினை கண்டறியும் பொருட்டு லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.
அதுபோல் கரூர் மாவட்டம் குளித்தலை சார் பதிவாளர் அலுவலகத்தில் கரூர் டிஎஸ்பி ஆம்ரோஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் அடங்கிய குழுவினர் திடீர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சார்
பதிவாளர் அலுவலகத்தில் துணை பதிவாளர் ஸ்ருதி, பத்திர எழுத்தர், பத்திரம் பதிய வந்தவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் இருந்தனர்.
சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக அலுவலகத்தை பூட்டி நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 3 லட்சம் பணத்தினை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளார்.
சார் பதிவாளர் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.