சபரிமலைக்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.குறிப்பாக மண்டல பூஜை, மகரவிளக்கு சீசனங்களில், ஒரே நாளில் 80,000 முதல் 90,000 வரையான பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கபட்டு வருகின்றனர்.
சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டு (Travancore Devaswom Board) 2025 ஆம் ஆண்டில் இரண்டு இன்சூரன்ஸ் திட்டங்களை அறிவித்துள்ளது.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:கேரளா மாநிலத்திலேயே எந்த இடத்திலும் விபத்தில் உயிரிழந்த ஐயப்ப பக்தரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் வரை விபத்து இன்சூரன்ஸ் வழங்கப்படும் .
இயற்கையாக (மாரடைப்பு, மூச்சுத்திணறல் போன்ற காரணங்களால்) மரணமடையும் பக்தர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் வரை நிவாரண தொகை வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் நிதி, பொது நிவாரண நிதி மூலம் நிர்வகிக்கப்படும்; இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தாராளமாக நன்கொடை வழங்கலாம். மேலும், ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் ரூ.5 நன்கொடை கோரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்த பக்தரின் உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளையும் தேவசம்போர்டு மேற்கொள்ளும். இதன் மூலம் கேரளா மாநிலத்தில் சபரிமலை யாத்திரை செய்யும் அனைத்து ஐயப்ப பக்தர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையூட்டும் ஆதரவு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.