வெற்றி மாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் படம் அரசன். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் வெற்றிமாறன், சிலம்பரசன் கூட்டணியில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ’அரசன்’ திரைப்படத்தின் ப்ரோமோ நேற்று மாலை திரையரங்குகளில் வெளியானது.
‘அரசன்’ திரைப்படத்தின் கதையானது, ’வடசென்னை’ திரைப்பட கதையை ஒட்டியே இருக்கும் என இயக்குநர் வெற்றிமாறன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்தநிலையில்தான், தற்போது சிலம்பரசனின் அரசன் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது.
முன்பெல்லாம் தனது படங்களின் ப்ரோமோ வீடியோக்களுக்கு மட்டும் வந்துபோன இயக்குநர் நெல்சன், இந்தமுறை அரசன் ப்ரோமோவிலும் வந்து ரசிக்க வைத்திருக்கிறார். 3 கொலைகளை செய்ததற்காக கோர்ட்டில் ஆஜராகும் சிம்பு, தனது கதையை நெல்சனிடம் கூறுவது போன்று ப்ரோமோ சிலம்பரசன் நெல்சனிடம், ‘படத்தில் இருக்கக்கூடிய காட்சிகள் அனைத்தும் கற்பனையே’ என்று போட்டு விடுங்கள்; ஏனெனில் அப்பொழுதுதான் சட்ட சிக்கல்கள் வராமல் தவிர்க்க முடியும் என கூறுகிறார்.
மேலும், என்னுடைய “கதையில் யாரை ஹீரோவாக நடிக்க வைக்கப் போகிறீர்கள்?” என சிலம்பரசன் கேள்வி எழுப்ப, அதற்கு இயக்குநர் நெல்சன் “உங்கள் மனதில் யாராவது இருப்பார்களே?” என கேட்க, சிலம்பரசன் அதற்கு பதில் கூறும் விதமாக, “தனுஷை நடிக்க வையுங்கள், சூப்பராக நடிப்பார்” என கூறுகிறார். இதனால் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் தனுஷ் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.