திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக 54 -வது ஆண்டு விழா கொண்டாட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் தலைமையில் இன்று நடந்தது. விழாவில் திருவெறும்பூர் பெல் கணேசா பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும், ஜெயலலிதா உருவப் படத்திற்கும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மாலை அணிவித்து மரியதை செய்தார். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. இவ்விழாவில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் சூரியூர் ராஜா,
மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் சுபத்ரா சுப்ரமணி,அண்ணா தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளரும், ஏடிபி தொழிற்சங்க பொதுச் செயலாளருமான கார்த்திக், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராவணன், வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.டி கார்த்திக், கூத்தப்பார் பேரூர் கழக செயலாளர் முத்துக்குமார், துவாக்குடி நகர செயலாளர் எஸ்.பி.பாண்டியன், அவைத்தலைவர் சுரேஷ், திருவெறும்பூர் பகுதி அவைத்தலைவர் முருகானந்தம், செயலாளர் பாஸ்கர் என்கின்ற கோபால் ராஜ், துணைச் செயலாளர் தீன் என்கின்ற அமீர் முகமது, ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் எஸ் ஆர் சபரி, சூரியூர் அழகர், குண்டூர் செல்வராஜ், வேங்கூர் மருதை ராஜ், காசிராமன், கமலி ஸ்டுடியோ யோகானந்தம், நவநீதகிருஷ்ணன், அண்ணா நகர் ராஜராஜன், நவல்பட்டு பால மூர்த்தி, திருவெறும்பூர் வட்டச் செயலாளர்கள் அபிமன்யு, ரோஷன், கிளியூர் லெக்கையன் மகளிர் அணி மின்னல் கொடி, நந்தினி சத்தியமூர்த்தி, ஜெயந்தி, உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.