தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அது தற்போது தீவிரமடைந்துள்ளது.அக்டோபர் 20ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் திருச்சி உள்பட டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.திருச்சியில் இன்று காலை மழை இல்லாத நிலையில் நேரம் செல்ல செல்ல திருச்சி மாநகரில் விட்டு விட்டு மழை பெய்தது.விட்டு விட்டு செய்த தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இது மட்டுமின்றி தீபாவளி பண்டிகையை ஒட்டி

கடைவீதிகளில் வழக்கமாக மக்கள் கூட்டம் அலைமோதும்.தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் விட்டுவிட்டு பெய்த மழையால் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாக இருந்தது.இது மட்டுமன்றி மாநகரில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்க து.

