இன்று (சனிக்கிழமை) தங்கம் விலை சற்று சரிவை சந்தித்துள்ளது. இதன்படி இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.250 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,950-க்கும், சவரனுக்கு ரூ.2,000 குறைந்து, ஒரு சவரன் ரூ.95,600-க்கும் விற்பனையாகி வருகிறது. இந்த தங்கம் விலை சரிவு நகைபிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.
வெள்ளிவிலை இன்று கிராமுக்கு ரூ.13-ம், கிலோவுக்கு ரூ.13,000-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.190-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
18.10.2025 ஒரு சவரன் ரூ.95,600 (இன்று)
17.10.2025 ஒரு சவரன் ரூ.97,600 (நேற்று)
16.10.2025 ஒரு சவரன் ரூ.95,200
15.10.2025 ஒரு சவரன் ரூ.94,880
14.10.2025 ஒரு சவரன் ரூ.94,600
13.10.2025 ஒரு சவரன் ரூ.92,640