டில்லியில் பி.டி. மார்க்கில் உள்ள பிரம்மபுத்ரா அடுக்குமாடி குடியிருப்பில் ராஜ்ய சபா எம்பிக்கள் வசிக்கின்றனர். 2020ம் ஆண்டு இந்தக் கட்டடம் புதிதாக கட்டி திறந்து வைக்கப்பட்டது. பார்லிமென்டிற்கு 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பு, பார்லி உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ குடியிருப்புகளில் ஒன்றாகும். குடியிருப்பு வளாகத்தின் மேல் தளங்களில் ஒன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டது, இதனால் அங்கு குடியிருப்பவர்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
எம்பி-க்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து.. டில்லியில் பரபரப்பு
- by Authour
