Skip to content

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த வாகனம்…8 பேர் பலி…

மராட்டியத்தின் நந்தர்பார் மாவட்டத்திற்கு உட்பட்ட சந்த்ஷைலி மலைத்தொடர் பகுதியில் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென பள்ளத்தாக்கிற்குள் வாகனம் கவிழ்ந்தது. சம்பவம் பற்றி அறிந்ததும், உள்ளூர்வாசிகளும் போலீசாரும் உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு பணிக்கு சென்றனர்.

இந்த விபத்தில் சிக்கி 8 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்திற்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. மேலும் போலீசார் இந்த விபத்து பற்றி விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!