Skip to content

கன மழை காரணமாக சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு..

கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது.

கடந்த சில நாட்களாக நகரில் மட்டுமின்றி, புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் அதனை ஒட்டிய நீர் வழித் தடங்களில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி சிறுவாணி அணைப் பகுதியில் 22 மில்லி மீட்டர் மழையும், அடிவாரத்தில் 35 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.

அணையின் நீர்த்தேக்கம் உயரம் 50 அடியாாகும். இன்று காலை 36.74 அடியாக இருக்கிறது. குடிநீர் தேவைக்காக 9.6 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

error: Content is protected !!