தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
கரூர் மாவட்டத்தில் காலை முதலை சாரல் மழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழையும் பெய்து வருகிறது.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜவஹர் பஜார், தான்தோன்றிமலை, பசுபதிபாளையம், வேலுச்சாமிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது.
இதேபோல் வெள்ளியணை வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
விடுமுறை தினம் என்பதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் பொதுமக்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.