பிரபல பாடகரும் நடிகருமான ஃபக்கீர் என்று பிரபலமாக அழைக்கப்படும் ரிஷப் டாண்டன், டெல்லியில் மாரடைப்பால் காலமானார். தனது மனைவியுடன் மும்பையில் வசித்து வந்த டாண்டன், தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாட டெல்லிக்கு சென்றிருந்த போது இந்த சோகம் நடந்துள்ளது. பாலிவுட் திரையுலகில் பணியாற்றிய டாண்டன், ‘ரஷ்னா: தி ரே ஆஃப் லைட்’ (2017), மற்றும் இஷ்க் ஃபகீரானா’ (2025) ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். ‘ஃபக்கீர் – லிவிங் லிமிட்லெஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அவரது மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அதைப் பெரிதாகக் கருதாமல் புறக்கணித்ததாகவும் கூறப்படுகிறது. அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ய அவரது குடும்பத்தினர் தற்போது உறவினர்களின் வருகைக்காகக் காத்திருக்கின்றனர், மேலும் இந்த கடினமான நேரத்தில் துக்கப்படுவதற்கு தனிமை கோரியுள்ளனர்.
பிரபல பாடகரும் நடிகருமான டாண்டன் மாரடைப்பால் மரணம்
- by Authour

