பீகார் சட்டசபை தேர்தலையொட்டி இந்தியாவில் 7 மாநிலங்களில் காலியாக உள்ள 8 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது.
தெலுங்கானா மாநிலம் ஜூப்லி ஹில்ஸ் தொகுதியில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ மகந்தி கோபிநாத் மாரடைப்பால் இறந்ததால் அங்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் அங்கு 211 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் மட்டும் 117 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இந்த தொகுதியில் மொத்தம் 211 வேட்பாளர்கள் 321 வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். சில வேட்பாளர்கள் 2 வேட்புமனுக்களை தாக்கல் செய்து இருக்கின்றனர்.
பிராந்திய ரிங் ரோடு திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் என பலர் அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதற்காக இந்த வேட்பு மனுக்களை தாக்கல் செய்து உள்ளனர்.