Skip to content

மனோரமாவின் மகன் உடல்நலக்குறைவால் காலமானார்

  • by Authour

தமிழ் திரையுலகின் மறக்க முடியாத நகைச்சுவை நடிகை ‘ஆச்சி’ மனோரமாவின் மகனும், நடிகருமான பூபதி இன்று (23.10.2025) காலமானார் என்ற துயரச் செய்தி திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 70 வயதான அவர், இன்று காலை 10.40 மணிக்கு இயற்கை எய்தினார்.

நடிகை மனோரமாவின் மகன் காலமானார்... திரையுலகினர் இரங்கல்- Actress Manorama son passed away

பூபதியின் மறைவு, அவரது குடும்பத்தினரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு மனைவி B. தனலெட்சுமி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்: B. ராஜராஜன், B. அபிராமி ,B. மீனாட்சி ஆவார்கள்.
கண்ணீருடன் இறுதி அஞ்சலி:

காலஞ்சென்ற பூபதியின் உடல், பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. Door No.9/5, நீலகண்ட மேத்தா தெரு, T Nagar இல்லத்தில் வைக்கப்படும். அவரது இறுதிச் சடங்குகள் நாளை 24-10- 2025 மதியம் 3 மணிக்கு மேல் கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெறும்.

error: Content is protected !!